சென்னை:

கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், “கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலைப் பெருவாரியாக குறைக்கலாம். அடுத்த 20 நாட்கள் சவாலானதாக இருக்கும்; தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும்”. இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.