டெஹ்ரான்: ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிஸாதே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஈரானின் எதிரி நாடான இஸ்ரேலுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர்.
ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிஸாதே, காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரின் காரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள், காரினுள் சரமாரியாக சுட்டனர்.
இதில், படுகாயமடைந்த பக்ரிஸாதேவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கே, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் உலகளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் இஸ்ரேல் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். கடந்த மாதம், ஒரு கூட்டத்தில் பேசிய இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நேரதன்யகு, பக்ரிஸாதேவின் பெயரைக் குறிப்பிட்டதால், இந்தக் கொலையில் அந்நாட்டின் அரசுக்கு தொடர்பிருக்கலாம் என்று ஈரான் தரப்பில் கருதப்படுகிறது.