தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே நாட்டின்  மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வீச்சு மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்க படையினரால், கொல்லப்பட்டானார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில், தற்போது நாட்டின் மூத்த அணுவிஞ்ஞானி அடையாளம் தெரியாத நபர்கள் (பயங்கரவாதிகள்) வெடிகுண்டு வீச்சினால் கொல்லப்பட்டு உள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிசாதே தலைநகர்  தெஹ்ரானின் கிழக்கே உள்ள அப்சர்த் எனும் கிராமம் பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருக்கையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெடிக்குண்டுகள் மூலம் அவரது காரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, அவர் கார்மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டனது.  இதில் படுகாயமடைந்த மொஹ்சேன் சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாரர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மொஹ்செனின் காவலர்கள் உள்பட மேலும் சிலர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒரு சிறந்த ஈரானிய விஞ்ஞானியை பயங்கரவாதிகள்   கொலை செய்தனர். இந்த கோழைத்தனம். இது இஸ்ரேலிய பங்கின் தீவிர அறிகுறிகளுடன்-குற்றவாளிள் இந்த செயலை செய்துள்ளது என்று  ஈரான் தெரிவித்து உள்ளது.  அவர்களின் வெட்கக்கேடான  இந்த செய்லகளை முடிவுக்குக் கொண்டுவரவும், இந்த பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கவும் சர்வதேச சமூகத்தையும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஈரான் அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரிப் குற்றம்சாட்டியுள்ளார்.