தைபே: ரசாயம் தடவிய பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து தைவான் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அந்நாட்டு அரசின் முடிவை எதிர்த்து, நாடாளுமன்றத்தில், பன்றிக் குடல்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய ரேக்டோஃபாமைன் என்ற ரசாயனம் தடவப்பட்ட பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த ரசாயனம் தடவப்பட்ட இறைச்சிக்கு, சீனாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தைவான் நாடாளுமன்ற கூட்டத்திற்கு, பன்றிகளின் குடல்களைக் கொண்டுவந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவற்றை, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் மீது வீசி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அவர்களின் இந்த செயலால், நாடாளுமன்றத்தின் தரை முழுவதும் பன்றிக் குடல்கள் சிதறிக் கிடந்தன. இந்த நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த செயலை அருவருக்கத்தக்கது என்று கண்டித்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.