சென்னை: மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா வந்த சீன அதிபர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு, தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதையொடிடடி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது, மாமல்லபுரம் தீவிரமாக சுத்தப்படுத்தப்பட்டு, அலங்கார வளைவுகள் அமைக்கப் பட்டும் கிளின் நகரமாக காட்சி அளிக்கிறது. அங்குள்ள புராதன சின்னங்களான வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளித்ததுடன், வண்ண விளக்குகள், பளபளவென சாலைகள் பசுமை போர்த்திய புல்தரைகள் என மாமல்லபுரம் பசுமை நகரமாகவே மாறிப்போயுள்ளது.
இதையடுத்து மாமல்லபுரம் எப்போதும், இதுபோன்று வண்ணபயமாகவும், பசுமையாகவும் பராமரிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மாமல்லபுரம் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில்உள்ளதால், மத்தியஅரசுதான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறி தமிழகஅரசு கழன்றுகொண்டது.
இந்த நிலையில், அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் மாமல்லபுரம் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியயிருந்தார். அதில், , பல்லவர் கால கடற்கரை நகரம் மாமல்லபுரம். தமிழர்களின் தொன்மை, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் மாமல்லபுரமும் ஒன்றாகும். மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாசார சின்னமாக அங்கிகரித்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். கடற்கரை கோவில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் கலாசாரங்களை சிதைக்கும் வகையிலான கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. குப்பைகளை கொட்டினால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள புரதான சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், முக்கிய இடங்களை மின்னொளியில் காட்சிப்படுத்தவும் வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த கடிதம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தகால விசாரணைகளின்போது, மாநில அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், யுனஸ்கோ-வால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகளுக்கு மத்திய அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
அதைத்தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலித்த வகையில், 2018-19ம் ஆண்டுகளில் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது .
இதையடுத்து, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி, மத்திய – மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு குறித்தும், சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து தமிழகஅரசுடன் தொல்லியல் துறை கலந்து பேசவும் நீதிமன்றம அறிவுறுத்தியது
இந்த நிலையில், வழக்க இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், மாமல்லபுரம் போன்ற 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 5 ஆயிரத்து 109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக உரிய பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய மாநிலஅரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்ததுடன், அடுத்த விசாரணைக்கு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரையும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலையும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.