விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘எனிமி’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ‘எனிமி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தனுஷின் பழைய மேலாளரான வினோத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.