
2009-ம் ஆண்டு ஜெய் நடித்து வெளியான வாமனன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழிகளிலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.
சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ஜேம்ஸ் எனும் படத்தில் ஒப்பந்தமானார்.
இவர் இப்பொழுது ஹிந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் தி சிம்பிள் மர்டர் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
வெப் சீரிஸின் ப்ரமோஷனுக்காக 2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் அமர்ந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியா ஆனந்த். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CH6_43zpPnO/
Patrikai.com official YouTube Channel