தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  இந்த புயல் அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்த புயலுக்கு நிவர் புயல் என பெயரிட்டது ஈரான் நாடு என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு சூட்டப்பட உள்ள பெயர்களின் விவரங்களும் வெளியாகி உள்ளது.
நிவர் புயல் தற்போது,  மேற்கு நோக்கி 6 கி.மீட்டர்  வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை மிரட்டி வரம  புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான் என்பது தெரிய வந்து.

நடப்பண்டில் மேற்கு வங்கத்தையும் வங்கதேசத்தை புரட்டிப்போட்ட புயலான உம்பான்   புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து என்றும்,   கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா  புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம் என்றும் தெரிவித்து உள்ளது.

கடலில் உருவாகும் புயலுக்கு, இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது உறுப்பு நாடுகள் பெயரிட்டிருந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றிருந்ததுதான் கடந்த மே மாதம் கரையை கடந்த உம்பான் புயல். அதன் பிறகு புதிய பெயர் பட்டியலின்படி புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம் ஆறு வானிலை மையங்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.  இதில், இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையும் ஒன்றாக உள்ளது.  டெல்லியில் செயல்படும் இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றது.

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி  வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைத்து வருகின்றன.  ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளின் பேரில் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே,  இந்தியா பரிந்துரைத்துள்ள பெயர்கள் வரிசையில், கதி, தேஜ், முரசு, ஆக் ஆகியவை உள்பட  169 பெயர்கள் உள்ளன. சுழற்சி முறையில் வரும் புயல் பெயர்களுக்கான பட்டியலில்  தமிழ் பெயரான முரசு இடம்பெற்றிருக்கிறது. இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர். இதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. இதில் இருந்தே ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வருகிறது.  அதுபோலவே, தற்போது உருவாக்கியுள்ள புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த நிவர் என்ற வைக்கப்பட்டிருக்கிறது.

நிவர் என்றால், இரானிய மொழியில்   வெளிச்சம்  என்று அர்த்தம்.

இதைத்தொடர்ந்து,  அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைப்படி புரேவி என்ற பெயர் வைக்கப்படும்.  இதுபோல, அடுத்த 25 வருடங்களில் ஏற்படும் புயல்களுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட்டு எப்போது புயல் வந்தாலும் அவற்றை சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் உள்ளன.