
தைவானின் தென்பகுதி நகரமான தைனானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில், பல கட்டங்கள் நொறுங்கி விழுந்தன. குறைந்தது எட்டு பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தைவான் உள்ளூர் நேரப்படி அதிகாலை நான்கு மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நொறுங்கி விழுந்துள்ள கட்டங்களில் சிக்கிக்கொண்டிருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel