அதன்படி கடந்த 21, 22ந்தேதிகளில் நடைபெற்ற முகாம்கள் மற்றும் ஆன்மூலமும், புதிதாக வாக்காளர் அட்டைக்கு புதிதாக 10,52,322 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 21-ந்தேதி நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர்களிடம் இருந்து கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்டு உள்ளன. அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 523 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 46 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடந்த 22-ந்தேதியன்று நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 384 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 6 லட்சத்து 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் கடந்த 2 சிறப்பு முகாம்களிலும் மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 322 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.