புதுடெல்லி: உலகளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு 62வது இடம் கிடைத்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. இதனடிப்படையில்தான் டெல்லிக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகள் அடிப்படையிலான போட்டிக்கான அடையாளம் கொண்டவை ஆகிய அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பட்டியலில், முதல் 5 இடங்களில் லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் உள்ளன. பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்த இந்திய நகரம் புதுடெல்லி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில், இதேப் பட்டியலில், டெல்லி, 81வது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.