ண்டன்

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.   இதில் அமெரிக்காவில் பிஃபிஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் சோதனை முடிந்து ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன.  ஏற்கனவே ஸ்புட்னிக் வி என்னும் ரஷ்ய தடுப்பூசியும் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.  இந்தியாவில் தயாராகும் இரு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனையை நெருங்கி உள்ளன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை குறித்த இடைக்கால அறிக்கை வெளியாகி உள்ளது.    இதில் காணப்படும் முக்கிய விவரங்கள் வருமாறு.

மூன்றாம் கட்ட சோதனையில் 131 கொரோனா நோயாளிகளுக்குத் தடுப்பூசி அளித்ததில் இரு கட்ட மருந்து வழங்கலில் 70.4% திறனுடன் இருந்துள்ளது.   இந்த இரு கட்டங்களின் சோதனைகளில் ஒன்றில் 90% திறனும் மற்றொன்றில் 62% திறனும் காணப்பட்டுள்ளது

முதல் கட்ட டோசில் அதிக அளவு திறனும் இரண்டாம் கட்ட டோசில் சாதாரண அளவு திறனும் தென்பட்டுள்ளன.    இந்த சோதனையின் முதல் கட்ட டோஸ் மருந்து மூலம் வைரஸ் பரவுவது வெகுவாக குறைந்துள்ளது.    இந்த சோதனையின் போது யாருக்கும் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்குத் தீவிரமான பாதிப்பு உண்டாகவில்லை

கடந்த ஏப்ரலில் இருந்து நடந்த இந்த சோதனையில் இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளைச் சேர்ந்த 24000 ஆர்வலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்த மருந்தை தற்போதுள்ள குளிர்பதன வெப்ப நிலையான 2.8 டிகிரியில் வைத்திருந்தால் போதுமானது என்பதால் சுலபமாகப் பல இடங்களுக்கும் அனுப்பி வைக்க முடியும்.

 இந்த மருந்தைப் பெரிய அளவில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் தயாரிக்க உள்ளதால் உலகெங்கும் மருந்து கிடைக்க வழி உள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது குறித்து, “இந்த கண்டுபிடிப்பால் பல உயிர்கள் காக்கப்படும்.  இந்த மருந்து சோதனையில் 90% திறனுள்ளதாகத்  தெரிய வந்துள்ளதால் அதிக அளவில் மக்களுக்குச் செலுத்தி கோவிட் 19 பரவுவதைத் தடுக்க முடியும்,.  இவை அனைத்தும் எங்களது சோதனை ஆர்வலர்கள் ஒத்துழைப்பால் நட்டதுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மருந்து அமெரிக்கா, கென்யா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 60000 ஆர்வலர்களுடன் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.   இந்த சோதனை மேலும் நடைபெற்று வருவதால் இறுதி முடிவு இந்த வருட இறுதிக்குள் வெளியாக உள்ளது.    அப்போது இந்த தடுப்பூசி மேலும் திறன் உள்ளது என தெரியவரும் எனக் கூறப்படுகிறது.