கவுகாத்தி
பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ள பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டா ஆகியோருக்கு ஒரிசாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 90% பங்கு உள்ளது. இந்த நிறுவனத்தின் பெயர் ஒரிசா இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட் ஆகும். இதைச் சுருக்கமாக ஒ ஐ பி எல் என அழைக்கப்படுகிறது. பண்டாவின் மற்றொரு நிறுவனமான ஆர்டெல் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த ரபீந்திரகுமார் சேத்தி என்பவர் இவர்கள் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அக்டோபர் 31 ஆம் தேதி அன்று பொருளாதார குற்றங்களின் கீழ் அளிக்கப்பட்ட இந்த புகாரில் ஓட்டுநர் ராஜேஷ் சேத்தியை பண்டா குர்தா மாவட்டத்தை சேர்ந்த 26 தலித்களிடம் இருந்து 7.294 ஏக்கர் நிலத்தை வற்புறுத்தி வாங்க வைத்துள்ளார். இந்த நிகழ்வு கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது. இதன் மூலம் தலித்கள் நிலத்தை வேறு ஒருவர் வாங்கக்கூடாது என்னும் நில சீர்திருத்தச் சட்டத்தை மீறி உள்ளதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலம் சந்தை விலையில் 50%க்கு வாங்கப்பட்டு அதன் பிறகு ரூ.65 லட்சத்துக்கு பண்டாவின் ஓ ஐ பி எல் நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ளது. இதற்காக சேத்திக்கு பணம் ஏதும் அளிக்கப்படவில்லை என புகாரில் கூறப்பட்டுள்ளது. சேத்தி தனது புகாரை குர்தா மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ளார். அவர் இந்த புகாரை குற்றவியல் பிரிவு விசாரணைக்கு பரிந்துரிஅ செய்துள்ளார். அந்த விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என கண்டறியப்பட்டு நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் முழு நேர ஊழியரான இருவரும் இந்த முடிவுகள் அனைத்தும் நிறுவன உரிமையாளர்களான பைஜயந்த் பாண்டே மற்றும் ஜகி மங்கத் பாண்டே ஆகியோர் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பொருளாதார குற்றங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த புகார் ஜாமீன் பெறமுடியாத சட்டத்தின் கீழ் வருகிறது. இதையொட்டி தங்களைக் கைது செய்யக் கூடாது எனவும் தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பண்டா தம்பதியர் ஒரிசா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இதை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் முதலில் இவர்கள் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும் நடந்த விசாரணையின் அடிப்படையில் பண்டா மற்றும் அவர் மனைவியைக் கைது செய்ய ஒப்புதல் அளித்து ஒரிசா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.