சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த நிலையில்,அவர் தங்கியிருந்த லீலாபேலஸ் விடுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தனியாக சென்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாலை 4.30 மணிக்கு அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில்,சுமார் 4 மணி அளவில் தவர்  தனியாக சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை எழுப்பி உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  அமித்ஷா வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவை வளர்க்கவே அவர் தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்பதாக இருந்தால் எங்களுக்கு நிகழ்ச்சி நிரல் வந்திருக்குமே. அப்படி எதுவும் வரவில்லை என கூறியிருந்தார்.ஆனால், தமிழகஅரசோ அவர் அரசு நிகழ்ச்சி வருவதாக அறிவித்திருந்தது. அடுத்தநாள் செய்தியாளர் சந்திப்பின்போது, அமித்ஷா வந்தால் அவரிடம் ஏழு பேரின் விடுதலை குறித்து வலியுறுத்துவோம் என்று சென்னார்.

அமைச்சர் ஜெயக்குமாரின்  மாறுபட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், இன்று  மாலை 4 மணிக்கு அமைச்சர் ஜெயக்குமார், லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் ரீதியாக சந்தித்தாரா அல்லது பதாகை வீச்சு குறித்து சந்தித்து விளக்கம் அளித்தாரா என்பது தெரிய வில்லை.