லாஸ்கா

லாஸ்காவின் உட்கியாக்விக் நகரில் இன்று முதல் இரு மாதங்களுக்கு சூரிய உதயம் இல்லாமல் முழுவதும் இரவாக இருக்கும்.

உலகம் உருண்டையானது மட்டுமின்றி வடக்கு தெற்காகச் சாய்ந்த கோணத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.   இவ்வாறு சுற்றும் போது வடக்கு மற்றும் தென் துருவத்தில் முழு இரவு அல்லது பகல் உண்டாவது வழக்கமாகும்.  அவ்வகையில் தற்போது வடக்கு பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது.

உலகின் வடக்கு உச்சியில் அலாஸ்கா நாட்டில் உள்ள உட்கியாக்விக் நகர் அமைந்துள்ளது.  ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இதற்கு முன்பு பாரோ என்னும் பெயரில் அறியப்பட்டது.  நேற்று இந்த பருவத்தின் கடைசி முறையாக இந்நகரில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நடந்துள்ளது.

இனி இந்த பகுதியில் இன்னும் இரு மாதங்களுக்குச் சூரிய உதயம் நடைபெறாது.  எனவே வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வரை இங்கு முழு இரவு மட்டுமே காணப்படும்.   ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சூரிய உதயத்துக்கு பிறகே இந்நகரில் பகல் வரும்.

இது போல முழு இரவு இருந்தாலும் இந்த பகுதியில் முழுமையான இருள் இருக்காது.  பொதுவாகச் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காணப்படும் வெளிச்சம் தென்படும்.  சூரியனைக் காண முடியாத நிலை இரு மாதங்களுக்கு இருக்கும்.