தீபாவளி பண்டிகையை நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் நண்பரான சஞ்சீவ் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் ‘இவங்க கூட கீர்த்திக்கு என்ன உறவு’ என்று சமூக வலைதளத்தின் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சஞ்சீவின் மனைவியான ப்ரீத்தி கீர்த்திசுரேஷ் தன்னுடைய பக்கத்துவீட்டுக்காரர் என்றும், அவர் தனக்கு ஒரு குழந்தை மாதிரி என்றும், தன்னுடைய குழந்தைகள் சரியாக ஐந்தரை மணிக்கு கீர்த்தி சுரேஷ் உடன் விளையாடுவது வழக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், கீர்த்தி சுரேஷிற்கு அசைவ உணவுகள் பிடிக்கும் என்பதால் அவருக்கு சமைத்துக் கொடுப்பதாகவும், அவர் சாக்லெட்டுகள் சமைத்து தனது குழந்தைகளுக்குக் கொடுப்பார்.
அவர் இங்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் இந்த வருடம்தான் அவர் எங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார் எனத்தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

 

[youtube-feed feed=1]