‘ஈஸ்வரன்’ படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.

‘மாநாடு’ படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதுவரை ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானாலும், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. தற்போது நவம்பர் 21-ம் தேதி ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]