1994 ஆம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டியில் வென்று ‘தஸ்தக்’ என்ற இந்தி சினிமா மூலம் நடிகையாக அறிமுகமனவர், சுஷ்மிதா சென்.
தமிழில் நாகார்ஜுன் ஜோடியாக ‘ரட்ஷகன்’ படத்தில் நடித்துள்ளார். மேற்கத்திய கலாச்சாரத்தை இந்தியாவுக்குள் பதித்துள்ள நடிகைகளுள் அவரும் ஒருவர்.
என்ன கலாச்சாரம்?
வெளிநாடுகளில் திருமணமாகாத பெண்கள், குழந்தைகளை தத்து எடுப்பது சாதாரணம். இந்தியாவில் அபூர்வம். ஆனால் சுஷ்மிதா 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரீனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அலிஷா என்ற இன்னொரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்.
இவர்களில் ரீனீ, ‘சட்டேபாஸி’ என்ற குறும்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.
இதன் ட்ரெய்லரை சுஷ்மிதா நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். நேற்று சுஷ்மிதா சென்னுக்கு 45 வது பிறந்த நாள்.
‘டீன்ஏஜ்’ வயதுள்ள இரண்டு குழந்தைகளுக்கு ‘தாயான’ சுஷ்மிதா இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தன்னை விட 15 வயது குறைவான ரொஹ்மான் ஷால் என்பவரை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
மாடல் அழகனான ரொஹ்மான், இன்ஸ்டாகிராம் மூலம் சுஷ்மிதா சென்னுக்கு அறிமுகமானவர். இருவரும் சேர்ந்தே உலகம் சுற்றி வருகிறரர்கள்.
– பா. பாரதி