டில்லி

டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ஒவ்வொரு மாநிலமும் அபராதம் விதிக்கிறது.

டில்லியில் இதுவரை 5.03 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 7900 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  சற்றே குறைந்திருந்த பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டில்லியில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ஏற்கனவே ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.  தற்போது அது 4 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2000 ஆகி உள்ளது.