பிரெஞ்ச் கயானா

ரோப்பிய வேகா ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறி பூமியில் விழுந்துள்ளது.

File picture

தற்போது பல நாடுகளிலும் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஏவும் பணிகளைச் செய்து வருகின்றன.  அவ்வகையில் ஐரோப்பாவில் ஏரியான்ஸ்பேக் என்னும் நிறுவனம் ராக்கெட் ஏவும் பணியைச் செய்து வருகிறது.  இந்நிறுவனம் பிரஞ்ச் கயானாவில் இருந்து ஐரோப்பிய வேகா விவி17 என்னும் ராக்கெட்டை ஏவியது.

இந்த ராக்கெட்டில் இரு செயற்கைக் கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன.  இந்த இரு செயற்கைக் கோள்களும் சுமார் 28 கோடி பவுண்ட் செலவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.  இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய வேகா விவி17 ராக்கெட்டின் 4 ஆம் பகுதியில் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.   இதைச் சரி செய்ய முடியாததால் இந்த ராக்கெட் வெடித்துச் சிதறி பூமியில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.