பிஹார்:
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக பிஹார் தனது மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தில்ருந்து (முஸ்லிம்கள்) ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தனது ஆளும் கட்சி கூட்டணியே பெற்றுள்ளது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளில்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா மற்றும் வீகாஷீல் இன்சான் கட்சி, ஆகிய கட்சிகளில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லை.

பிஹார் மாநிலத்தின் மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள், ஆனால் வெற்றி பெற்ற கட்சிகளில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லை என்பது அதிர்ச்சிகரமாகவே உள்ளது.

இந்த நான்கு கட்சிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்கள் 11 பேரை தேர்தலில் போட்டியிட வைத்தது, ஆனால் அந்த 11 பேரும் தோற்றனர் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

வெற்றிக் கூட்டணியில் உள்ள இந்த 4 கட்சிகளை தவிர, ராஷ்ட்ரிய ஜனதா தளதின் 75 எம்எல்ஏக்களில் 8 முஸ்லிம்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ள 19 எம்எல்ஏகளில் 4 முஸ்லிம்களும், அசாதுதீன் ஓவைசி கட்சியிலிருக்கும் 5 பேரில் 5 முஸ்லிம்களும், இடதுசாரிக் கட்சிகளில் இருக்கும் 16 பேரில் ஒரு முஸ்லிமும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவும் முஸ்லிமாக உள்ளனர். ஆனால் வெற்றி கூட்டணியில் மட்டும் முஸ்லிம் இல்லை.

இதனால் தற்போது ஏழாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சியில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இல்லாமல் அமைச்சரவை குழுவை உருவாக்கவேண்டி இருக்கும்.