டில்லி

கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து உலக உற்பத்தியாளர்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.   தற்போது இந்தியாவில் 88.75 லட்சம் பேர் பாதிப்பு அடைந்து 1.30 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   கொரோனா தடுப்பூசி சோதனையில் இந்திய நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிலையில் உள்ளன.  ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசிகள் ஒப்புதலுக்குத் தயாராக உள்ளன.

இதில் பிஃபிஸர் மற்றும் பயாண்டெக் நிறுவன தடுப்பூசி 90% திறன் உள்ளதாகவும் மாடர்னா நிறுவன தடுப்பூசி 94.5% திறன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   எனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் அவற்றை விட அதிக திறன் உள்ளதாக இருக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.   ஆனால் தற்போது உடனடியாக தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டிய நிலையில் இந்திய மக்கள் உள்ளனர்.

இதையொட்டி உலக அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த கொள்முதலைக் கவனித்து வரும் அதிகாரிகள் பிஃபைஸர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடனும் விலை குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

பிஃபிஸர் நிறுவனம் தங்கள் தடுப்பூசி ஒரு டோசுக்கு $19.50 இருக்கலாம்  என அறிவித்துள்ளது.  அதே வேளையில் ஆக்ஸ்ஃபோர்ட் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒரு டோஸ் விலை  சுமார் 2 டாலருக்கும் குறைவாக இருக்கும் எனக் கூறி உள்ளது.  மாடர்னா நிறுவன தடுப்பூசியின் விலை $32 முதல் $37 வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியா இதுவரை இந்த இரு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மருந்து கொள்முதல் குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனினும் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது.   இந்த அதிகாரிகள் இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர்.  இந்திய மருந்து பந்தயத்தில் முதலில் இருந்தாலும் மற்ற நிறுவனங்களின் மருந்துகளையும் அரசு பரிசீலனையில் வைத்துள்ளது.   இதில் தற்போதுள்ள அவசர நிலை, மற்றும் கட்டுப்படியாகும் விலை ஆகியவையும் பங்கு வகிக்கிறது.

அதே வேளையில் அமெரிக்காவின் விலையை விடக் குறைத்து அளித்தால் இந்திய அரசு பிஃபிசரி மற்றும் பயாண்டெக் தடுப்பூசியை 20 கோடி டோஸ்கள் வாங்கத் தயாராக உள்ளதாகவும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.   இந்தியத் தடுப்பு மருந்துகள் சோதனை முடியும் தறுவாயில் உள்ளதால் உடனடி தேவைக்கு மற்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது உண்மையாகும்.

இதையொட்டி உலக அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த கொள்முதலைக் கவனித்து வரும் அதிகாரிகள் பிஃபைஸர் மற்றும் நவீனமா உள்ளிட்ட நிறுவனங்களுடனும் விலை குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்திய அரசின் கணக்குப்படி 50000 கோடி செலவழிக்கத் தயாராக உள்ளதால் அதற்கு ஆக்ஸ்போர்ட் ஆன்ஸ்டிராஜெனிகா மருந்துதான் வாங்க முடியும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய அரசு தற்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் தடுப்பூசி முன்னேற்றத்தைக் கவனித்து வருகிறது எனவும் குறைந்த விலையில் மிகுந்த பாதுகாப்பு மற்றும் திறனுள்ள தடுப்பூசியை அதிக அளவு மக்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அயோக் தெரிவித்துள்ளது.