இஸ்லாமாபாத்: பாதுகாப்பு படையில் கலகத்தை உண்டாக்கும் வகையில் குற்றச்சாட்டு சுமத்துவதானது மிகப்பெரிய தேசத் துரோக செயலாகும் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது குற்றம் சாட்டியுள்ளார் இந்நாள் பிரதமர் இம்ரான்கான்.
ஊழல் வழக்கில் சிறைதண்டனைப் பெற்றுள்ள நவாஸ் ஷெரீப், உடல்நலக் குறைபாட்டிற்காக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில், அந்நாட்டு ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் பியாஸ் ஹமீத் ஆகியோரின் துணையுடனேயே தேர்தலில் இம்ரான்கான் வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார் நவாஷ் ஷெரீப்.
இதற்கு பதிலளித்துள்ள இம்ரான்கான், “பாதுகாப்பு படையில் கலகத்தை உண்டாக்கும் வகையில் குற்றச்சாட்டு சுமத்துவதானது மிகப்பெரிய தேசத் துரோக செயலாகும்” என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.