புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கமானது 7.61% என்பதாக உயர்ந்துள்ளது.
இந்தப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 7.27% என்பதாகவும், கடந்தாண்டு அக்டோபரில் 4.62% என்பதாகவும் இருந்தது.
உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் நுகர்வோர் உணவு விலைக் குறியீடு, 11.07% என்பதாக உயர்ந்துள்ளது. இது, செப்டம்பரில் 10.68% என்பதாக இருந்தது.
ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தை, 4% என்பதாகவும், ஏற்ற-இறக்கத்தை, 2% என்பதாகவும் நிர்ணயித்துள்ளது.