பாரிஸ்: அல்கொய்தா ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளது.
அல்கொய்தா அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சாஹேல் என்ற பிராந்தியத்தில் அந்த அமைப்பு இயங்கி வருகிறது.
இந் நிலையில் அல்கொய்தா ராணுவ தலைவரான பாக் ஹக் மவுசா மாலியில் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாடு அறிவித்து உள்ளது. தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் இது மிக பெரிய வெற்றி என்று பிரான்ஸ் கூறி உள்ளது.
சாஹேல் பிராந்தியத்தில் புலனாய்வு அமைப்புகள், தரைப்படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் மவுசா பலியானதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.