டில்லி
பிரபலங்கள் பலரும் சமூக வலை தளமான டிவிடடரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் மற்றும் திரை உள்ளிடட பல பிரபலங்களும், தங்களது அறிக்கை மற்றும் பல முக்கிய விவரங்களை டிவிடடர் மூலம் தெரிவிக்கின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் வாழ்க்கையில் டிவிடடர் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிரதமர் மோடிக்கு அடுத்தாடியாக டிவிடடரில் மத்திய உள்துறை அமைச்சருக்கு அதிக பின்பற்றுவோர் உள்ளனர். இவரை டிவிடடரில் சுமார் 2,36 கோடி பேர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் டிவிடடரில் அவருடைய சுய விவர படம் என்னும் டி பி முடக்கப்பட்டது.
அந்த படத்துக்கு பதிலாக மீடியா நாட் டிஸ்பிலேட் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அது குறித்து டிவிடடர் நிர்வாகம், அந்த புகைப்படம் குறித்த ஒரு விளக்கம் கேட்ட போது அது கிடைக்காததால் நீக்கப்பட்ட்தாக தெரிவித்தது. அதன் பிறகு உரிய விளக்கம் அளித்த பிறகு மீண்டும் படத்தை டிவிட்டர் பதிவு செய்துள்ளது.