சென்னை: திரு.வி.க. நகரில் அரசுக்கு சொந்தமானரூ.57 லட்சம் மதிப்பிலான சொத்து சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அந்த சொத்துக்களை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.
சென்னையில், பருவமழை காலத்தில் மழைநீரை சேமிக்க, சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் உள்ள முக்கிய நீர்நிலைகளை பெருநகர சென்னை மாநகராட்சி புனரமைத்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்தில் ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 655 வழிகாட்டு மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 1,977 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு–-74, புரசைவாக்கம் கிராமம், கதவு எண்.52, சுப்புராயன் 2–வது தெரு, நம்மாழ்வார்பேட்டை, சென்னை என்ற முகவரியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 655 வழிகாட்டு மதிப்புள்ள 1,977 சதுர அடி குத்தகை நிலம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சியால் நேற்று (11–ந் தேதி) கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.