சென்னை: 2021 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டு உள்ளனர்.

சட்டமன்ற பேரவை பொது தேர்தல் – 2021 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்துள்ளது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்.
அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, கழகத்தின் சார்பில் ஊடகவியலாளர், செய்தியாளர்களை சந்திக்கும் குழு, ஊடக ஒருங்கிணைப்பாளர் உள்பட பல குழுக்களும், அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Patrikai.com official YouTube Channel