டெல்லி: உள்நாட்டு விமானங்களில் தற்போது பயணிகள் இருக்கைகளை 60ல் இருந்து 70 சதவீதமாக நிரப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 மாதங்கள் கழித்து மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. எனினும் கொரோனா பரவலுக்கு முன் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதம் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

பின்னர் இந்த எண்ணிக்கையை 45%ஆக அதிகரித்து கடந்த ஜூன் 26ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் தற்போது 60ல் இருந்து 70% சதவீதமாக இயக்கப்பட உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு விமான சேவையை வழங்கும் நிறுவனங்கள் 70% வரை விமானங்களில் இருக்கைகளை நிரப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  உள்நாட்டு விமானங்களில் நவம்பர் 8ம் தேதி மட்டும் ஒரே நாளில் 2.06 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது.