மனமா: உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா காலமானார்.

உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. காலமான கலீபா பின் சல்மான் அல் கலீபாவுக்கு வயது 84.

பிரதமர் காலமானதையடுத்து, ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிலிருந்து உடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதி சடங்குகள் நடைபெறும். கொரோனா பரவல் காலம் என்பதால் குறைவான எண்ணிக்கையில் உறவினர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் கலீபா பின் சல்மான் அல் கலீபா. நவம்பர் 24, 1935ம் ஆண்டு பிறந்த அவர், . 1971ம் ஆண்டுஆகஸ்ட் 15ம் தேதி பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.