ஷில்லாங்
மேகாலய காங்கிரஸ் அம்மாநில அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இம்மாநில சட்டப்பேரவையில் 60 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 38 பேர் ஆளும் கூட்டணியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் 20 உறுப்பினர்கள் உள்ளனர்.
இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.
முதல்வர் கன்ராட் சங்மாவின் நடவடிக்கைகளால் கூட்டணி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் முகுல் சங்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கன்ராட் சங்மாவின் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறினார்.
இன்று ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.