வாஷிங்டன்

மெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டுள்ளார்.

டிரம்பின் பதவிக்காலம் இன்னும் சுமார் 70 நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் டிரம்ப் தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான மார்க் எஸ்பர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதை டிவிட்டரில் அறிவித்த டிரம்ப் அவருடைய சேவைக்கு நன்றி என  பதிந்துள்ளார்.

புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் கிறிஸ்டோபர் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.