பாட்னா: பீகாரில் ஆர்ஜோடி காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சிஅமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கட்டமாகவும் அதன்பின்னர் 3ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி என என 3 கட்டங்களாக நடந்தது. இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கை நாளை (நவ.10) நடக்கவுள்ளது. மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 55 மையங்களில் நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இந்த நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி ஆர்ஜேடி கூட்டணி 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நிதிஷ்குமார் பாஜக கூட்டணி 93 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
மேலும், பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பிற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.