திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நவம்பர் 7ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. டெல்லி சென்றுவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அவர் திருவனந்தபுரம் திரும்பினார்.

அதற்கு மறுநாள் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந் நிலையில், மருத்துவ கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.