கலிஃபோர்னியா
ஹைபர்லூப் போக்குவரத்து மூலம் முதல்முறையாக இரு மனிதர்கள் பயணம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு மனிதருக்கும் தற்போதைய கால கட்டத்தில் பயணத்துக்காக அதிக அளவில் நேரம் செலவிடுகின்றனர். அந்த நேரத்தைக் குறைக்க பல்வேறு அதிவேக போக்குவரத்து சாதனங்களைக் கண்டுபிடிக்கின்றனர். ஆயினும் நேரப் பற்றாக்குறை உள்ளது. இதில் சமீபத்திய தொழில் நுட்பம் ஹைபர்லூப் போக்குவரத்து ஆகும்.
ஹைபர்லூப் என்பது வெற்றிட குழாய் போன்ற அமைப்பினுள் ரயில் மூலம் வேகமாகப் பயணிப்பது ஆகும். உதாரணமாக இதில் பயணிக்கும் போது நியூயார்க் மற்றும் வாஷிங்டன் இடையிலான பயணம் அரை மணி நேரமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் விமானத்தை விட இரு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
இந்த ரயிலை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வர்ஜின் ஹைபர்லூப் என்னும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதுவரை இந்த ரயில் 400 முறை ஆட்கள் இல்லாமல் சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜோஸ் கீகெல் மற்றும் சாரா ஆகியோர் முதல் முறையாக பயணம் செய்துள்ளனர்.
ஜோஸ் மற்றும் சாரா ஆகியோர் 172 கிமீ தூரத்தை தற்போது 1 மணி நேரத்தில் கடந்துள்ளனர். இந்த ரயில் மணிக்கு 966 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியதாகும். தற்போது இந்த ரயிலில் முதல் முறையாக மனிதர்கள் வெற்றிகரமாகப் பயணம் செய்தது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]