தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நாளில் இருந்து கணவருடன் எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கணவருடன் தேனிலவு செல்ல உள்ளதாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார் .

திருமணமான மூன்றாவது நாள் காஜல் அகர்வால் I Say NO என்று கூறி ஒரு ட்வீட் போட்டார். தற்போது YES சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல். இதுவும் கொரோனா வைரஸ் பற்றி தானாம் .
கல்யாணத்திற்கு முன்பு எல்லாம் இந்த அக்கறை எங்கே இருந்தது?. இவர் ஏதோ விளம்பரத்திற்காகத் தான் இப்படி செய்கிறார். எங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சும்மா சும்மா எஸ், நோ என்று மாற்றி, மாற்றி பேசாமல் குடும்ப வாழ்க்கையை கவனியுங்கள். தேனிலவுக்கு சென்ற இடத்தில் ஏன் இந்த வீடியோ எல்லாம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.