வாஷிங்டன்
அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு அவருடைய கணவர் மற்றும் அக்கா மகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவருக்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
கமலா ஹாரிஸ் கணவர் டவுக் எம்ஹோஃப் கமலா ஹாரிஸ் வெற்றியால் தாம் பெருமை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் அக்கா மகளான மீனா ஹாரிசும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
“துணை அதிபர் மேடம் எனச் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது.
துணை அதிபர் சித்தி எனச் சொல்வதும் மிக அருமையாக உள்ளது”
என பதிந்துள்ளார்.