வாஷிங்டன்

புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கர்நாடக வம்சாவளி இந்திய மருத்துவர் ஒருவரைப் பணி நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் மிகவும் அதிகமாக உள்ளது.

உலகில் அதிக அளவில் கொரோனா தாக்குதல் உள்ள அமெரிக்காவில் இதுவரை பாதிப்பு 1.01 கோடியைத் தாண்டி உள்ளது.

இங்கு இதுவரை 2.43 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததும் அவர் தோல்விக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை புதிய கொரோனா மீட்புப் படை ஒன்றை ஜோ பைடன் அறிவிக்க உள்ளார்.

இந்த படையின் தலைவர்களில் ஒருவராக விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒபாமாவின் பதவிக் காலத்தில் பொது அறுவை சிகிச்சை நிபுணராகப் பணி புரிந்துள்ளார்.

விவேக் மூர்த்தி  கர்நாடகாவில் இருந்து குடியேறிய இந்தியரின் மகன் ஆவார்.