அறிவோம் தாவரங்களை – சொர்க்க மரம்
சொர்க்க மரம் (Simarouba glauca)
அமெரிக்கா உன் தாயகம்!
எல்லா வகை மண்ணிலும் வளரும் நல்ல மரம் நீ!
உன் இன்னொரு பெயர் ‘சிமரூபா’. இயற்கை மருத்துவம், ஆங்கில மருத்துவத்தில் இடம் பெறும் இனிய மரம் நீ!
15 மீ. வரை உயரும் வளரும் பசுமை மரம் நீ! கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வளர்ந்திருக்கும் மருந்து மரம் புற்றுநோய், வயிற்றுப் போக்கு,புழுக்கள், வயிற்றுக் கிருமிகள்,செரிமானம் , சிறுநீரகக்கல் பிரச்னை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
செயற்கை எண்ணெய், சோப்பு, மெழுகு சாயம், பழச்சாறு, எண்ணெய் தயாரிப்பு, காகித அட்டைகள், மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் சிறப்பு மரம் நீ!
வேம்பு போல இலை, விதை,வேர்கனி,கனித்தோல் என எல்லாம் பயன்படும் நல்ல கற்பகமரமே! சுவையான கனி கொடுக்கும் சொர்க்க மரமே!
நல்ல காற்று கொடுக்கும் செல்ல மரமே! ஆக்சிஜனை அள்ளி வழங்கும் கொடை மரமே!
பூமியைக் குளிர்ச்சியாக்கும் குளிர்மரமே!
பூச்சிகள் அரிக்காத வைர மரமே!
மண்ணரிப்பைத் தடுக்கும் மகத்துவ மரமே!
கால்நடைகளுக்கு விதை உணவு தரும் மேல்நாட்டு மரமே!
அனைவராலும் அறியப்படாத அரிய மரமே!
மண்புழுக்களுக்கு உதிர்ந்த இலை தரும் மகத்துவமரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.