அறிவோம் தாவரங்களை – தவசிக்கீரை செடி.
தவசிக்கீரை செடி. (Sauropus androgynus)
தமிழகம் உன் தாயகம்!
ஈரமண்ணில் இனிதாய் வளரும் இனியச்செடி நீ!
6 அடி வரை உயரம் வளரும் அழகுச்செடி நீ!
அனைத்து வைட்டமின்களும் அடங்கியிருப்பதால் நீ ‘மல்டி வைட்டமின் கீரை’ ஆனாய்.
ரத்த அழுத்தத்தைச் சமன் செய்வதால் நீ ‘பிரஷர் கீரை’ ஆனாய்.
எலும்பு வலிவு, புற்றுநோய், தாய்ப்பால் அதிகரிப்பு, பல்நோய்கள், மூளை வளர்ச்சி, ரத்தச் சுத்தகரிப்பு, கண்பார்வை, வயிற்றுப் பூச்சிகள், ஆஸ்துமா, வயிற்று உப்புசம், களைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நீ!
பொரியல், சாம்பார்,கூட்டு என எல்லாம் செய்யப் பயன்படும் நல்ல செடி நீ!
விதைகள் மூலமும் தண்டுகள் மூலமும் இன விருத்தி செய்யும் இனிய கீரைச் செடியே!
சூரிய வெளிச்சத்தில் வளரும் இனிய கீரைச் செடியே!
புத்துணர்வை ஏற்படுத்தும் புனிதச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நலநாள் வணக்கம்.
பேரா.முனைவர்.
ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.