டெல்லி: தமிழகம் உள்பட 16 மாநில அரசுகளுக்கு 2ம் கட்ட ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததால் மாநில அரசுகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீட்டை அளித்து வருகிறது.
மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியின் முதல் தொகுப்பாக ரூ.6 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. கடந்த 23ம் தேதி 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
இந் நிலையில். ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 6,000 கோடியை 2வது தொகுப்பாக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதன்படி ரூ. 6 ஆயிரம் கோடியை 16 மாநிலங்களுக்கும், 3 யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு இந்த தொகை தரப்படும்.