ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது.
மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் தொற்று நோய்கள் திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் சாந்தி தாரிவால் பேரவையில் அறிமுகம் செய்தார்.
இந்த சட்டமானது, பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்குகிறது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
கொரோனாவிலிருந்து பாதுகாக்க மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. சட்டசபையில் இந்த சட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், முகக்கவசமே தடுப்பூசியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.