மெக்கா
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா சவுதி அரேபியாவில் உள்ளது.
இங்குள்ள மசூதி இஸ்லாமியர்களின் புனித இடங்களில் ஒன்றாகும்.
இன்று இந்த மசூதியின் தெற்கு நுழைவாயில் அருகே ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றுள்ளது.
இந்த மசூதியில் 2 அடுக்கு தடுப்புக்களை உடைத்துச் சென்ற அந்தக் கார் மசூதியின் சுவற்றில் மோதி நின்றது.
இந்த காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நிதானம் இழந்து காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel