பெங்களூரு :
கர்நாடக மாநில அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு ஊழியர்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என அரசாங்க கெசட்டில் வரைவு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கைக்கு ஆட்சேபம் இருந்தால் இன்னும் 15 நாட்களில் அவர்கள், தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு இந்த நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
இந்த வரைவு அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
- கர்நாடக அரசு ஊழியர்கள் திரைப்படம் மற்றும் டி.வி.க்களில் நடிக்க கூடாது.
- நாளிதழ் மற்றும் பருவ இதழ்களில் செய்தி பிரிவிலோ அல்லது நிர்வாகப்பிரிவிலோ அரசு ஊழியர்கள் பங்களிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.
இது தவிர புத்தகங்கள் வெளியிடுவதிலும்,, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
– பா.பாரதி