புதுடெல்லி:
நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக வெளிப்புற உதவி அணை புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (டி.ஆர்.ஐ.பி) இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.10,211 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031 வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.