உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.
விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
தமன்னா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், உள்பட பலருக்கும் பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

[youtube-feed feed=1]