ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி.
இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதென முடிவுசெய்தது கேஎல் ராகுலின் அணி. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர் ஷப்னம் கில் 45 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடக்கம்.
இயான் மோர்கன் 25 பந்துகளில் 40 ரன்களை அடிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது.
பஞ்சாப் சார்பில், ஷமி 3 விக்கெட்டுகளை எடுக்க, கிறிஸ் ஜோர்டான் மற்றும் பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பிஷ்னாய் 4 ஓவர்களுக்கு வெறும் 20 ரன்களே விட்டுக்கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில், துவக்க வீரர் ராகுல் 28 ரன்களை எடுத்து அவுட்டாக, மந்தீப் சிங் 56 பந்துகளில் 66 ரன்களை அடிக்க, கிறிஸ் கெய்ல் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 51 ரன்களை விளாசினார். இறுதியில் 18.5 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்களை எடுத்து வென்றது பஞ்சாப் அணி.