ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக்.
இவரது மனைவி அலியா, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் “எனது கணவர் நவாசுதீன் சித்திக், அவரது சகோதரர்கள் பயாசுதீன், அயாசுதீன், மனுசுதீன் மற்றும் அவர்கள் தாயார் மெஹருன்னிசா ஆகியோர் தன்னை அடித்து உதைத்துடன், மானபங்கம் செய்தனர்” என கூறி உள்ளார்.
இதையடுத்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில், நவாசுதீன் உள்ளிட்டோர், தங்களை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என மனு செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், அலியா புகார் மீது, நவாசுதீன், அவரது தாயார் மெஹருன்னிசா சகோதரர்கள் பயாசுதீன் அயாசுதீன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது..
எனினும் மற்றொரு சகோதரர் மனுசுதீனை கைது செய்ய அலாகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
-பா.பாரதி