துபாய்: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளின் அடிப்படையில், அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல்.
மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி, 567 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் ராகுல். 11 போட்டிகளில் ஆடி 471 ரன்களை அடித்த ஷிகர் தவான் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.
மொத்தம் 10 போட்டிகளில் ஆடி 398 ரன்களை அடித்த மயங்க் அகர்வால் மூன்றாமிடத்திலும், 11 போட்டிகளில் ஆடி 382 ரன்களை அடித்த ஷ்ரேயாஸ் நான்காமிடத்திலும், 11 போட்டிகளில் ஆடி 376 ரன்களை அடித்த டூ பிளசிஸ் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
 

[youtube-feed feed=1]