டில்லி

ரான் நாட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் ஓ என் ஜி சி தனது எரிவாயுக் கிணற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிகுந்த ஈரான் நாட்டில் ஃபார்சி என்னும் இடத்தில் ஒரு எரிவாயு கிணறு உள்ளது.  இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ஓ என் ஜி சி) நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுப் பிரிவு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த எரிவாயு கிணற்றைத் தோண்டியது.

இந்த கிணற்றுக்கு ஃபர்சாத் பி எனப் பெயரிட்ட ஓ என் ஜி சி இதை முன்னேற்ற 11 பில்லியன் டாலர்களை அளித்துள்ளது.  பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கிணறு 3500 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.    இந்த கிணற்றின் ஆழம் நீர் மட்டத்தில் இருந்து 20-90 மீட்டர் ஆகும்

ஈரான் நாட்டில் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணற்றுப் பணிகளை நடத்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து ஓ என் ஜி சி நிறுவனத்தால் இனி இந்த எண்ணெய் கிணற்றுப் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இது குறித்து நிறுவனம் ஈரான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.